

‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’. இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படம் 2024ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை (ஹாட் ஸ்பாட்) போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் பிரைம் வீடியோ, ஆஹா, சிம்பிளி சவுத், ஏபி இண்டர்நேஷனல், லைன்ஸ் கேட் ப்ளே மற்றும் ஷார்ட் பிளிக்ஸ் ஆகிய தளங்களில் வருகிற 20ந் தேதி வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் தற்போது அதன் டிஜிட்டல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.