ஓடிடியில் வெளியாகும் “இந்திரா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?


ஓடிடியில் வெளியாகும் “இந்திரா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
x

கிரைம் திரில்லர் பாணியில் உருவான இந்திரா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'இந்திரா' என்கிற படம் வெளியானது. இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண் மாஸ்டர் , சுனில், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடித்துள்ளார். பெண்கள் கொலைப்படுகின்றனர், அதைச் செய்தது யார் என்பதை மையப்படுத்தி கிரைம் திரில்லர் பாணியில் இந்திரா படம் எடுக்கப்பட்டது.

ஜேஎஸ்எம் புரொடக்ஷன் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்திரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் 19 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story