ஓடிடியில் வெளியாகும் “களம்காவல்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஓடிடியில் வெளியாகும் “களம்காவல்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் களம்காவல். நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவான களம்காவல் படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.

காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார். களம்காவல் படம் ரிலிஸ் ஆகி 11 நாட்களில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளை முதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com