ஓடிடியில் வெளியாகும் “லவ் மேரேஜ்” படம்... எங்கு, எப்போது பார்க்கலாம்?

அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கிய 'லவ் மேரேஜ்' படம் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் “லவ் மேரேஜ்” படம்... எங்கு, எப்போது பார்க்கலாம்?
Published on

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இதில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக வெளியான லவ் மேரேஜ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில்  திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற இப்படம் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com