ஓ.டி.டி.யில் வெளியானது 'விடாமுயற்சி' படம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியானது 'விடாமுயற்சி' படம்
Published on

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் வழக்கமான அஜித்தின் ஆக்ஷன் படமாக இல்லாமல் காணாமல் பேன மனைவியைத் தேடும் கணவனைப் பற்றிய படமாக இருந்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் ஓ.டி.டி.யில் கண்டு கழிக்கலாம். 

X

Daily Thanthi
www.dailythanthi.com