ஓடிடியில் ''தி கேம்''...ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் திரில்லர் தொடரை எதில் பார்க்கலாம்?


The Game on OTT: Netflix Begins Streaming Shraddha Srinath’s Thriller Series
x

ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.

சென்னை,

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடைசியாக கலியுகம் 2064 இல் நடித்தார். அடுத்ததாக தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் புதிய தமிழ் திரில்லர் படமான ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’-ல் நடித்திருக்கிறார்.

ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தயாரித்த இந்த தொடர் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் ஷ்ரத்தாவுடன், சந்தோஷ் பிரதாப், சாந்தினி, விவியா சாந்த், ஹேமா, சுபாஷ் செல்வம், பாலா ஹாசன், சியாமா ஹரிணி மற்றும் தீரஜ் கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1 More update

Next Story