ஓ.டி.டி.யில் வெளியானது 'ஏஸ்' திரைப்படம்

விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த நடித்துள்ள 'ஏஸ்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியானது 'ஏஸ்' திரைப்படம்
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி 'ஏஸ்' என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி 51-வது படமான 'ஏஸ்' திரைப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 23ம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com