ஓடிடியில் வெளியானது 'கெணத்த காணோம்' திரைப்படம்

தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் ஒரு கிராமம் சந்திக்கும் பிரச்சினை நகைச்சுவையுடன் இந்தபடம் கூறியுள்ளது.
ஓடிடியில் வெளியானது 'கெணத்த காணோம்' திரைப்படம்
Published on

சென்னை,

'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்ய சோதனை' உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்த நிலையில், அவருடன் பணியாற்றிய குழுவினர் படத்தை முழுமையாக்கி வெளியிட்டனர்.

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில்

இந்தப் படத்தில் யோகி பாபு கோயில் பூசாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

சமூக கருத்துடன் கூடிய நகைச்சுவை திரைப்படம்

தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் ஒரு கிராமம் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவையுடன் சமூகப் பார்வையில் 'கெணத்த காணோம்' திரைப்படம் சித்தரிக்கிறது.

திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்கள் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் படத்தை கண்டு ரசிக்கலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com