ஓ.டி.டி.யில் வெளியாகும் 'கொஞ்சம் பேசினால் என்ன' திரைப்படம்

'கொஞ்சம் பேசினால் என்ன' என்ற திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'கொஞ்சம் பேசினால் என்ன' திரைப்படம்
Published on

சென்னை,

'தும்பா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது.

சூப்பர் டாக்கீஸ் தயாரித்த இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். லெனின் ஒளிப்பதிவும், தனசேகர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு பேஷன் டிசைனராகவும், வினோத் படம் வரையும் ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com