ஓ.டி.டி.யில் வெளியாகும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார்.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்
Published on

சென்னை,

ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நிலையில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படமானது, இளைய தலைமுறையினரின் நட்பு பற்றிய கருத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சுனில் காஷிப் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ்குமார் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தநிலையில், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 13-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com