இந்த வார ஓடிடி வெளியீடு.. எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்த வார ஓடிடி வெளியீடு.. எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
Published on

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

"மன சங்கர வர பிரசாந்த் காரு"

இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மன சங்கர வர பிரசாந்த் காரு. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 11ந் தேதி (நேற்று முன்தினம்) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"அனகனக ஒக்க ராஜு"

நவீன் பொலிஷெட்டி மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படம் 'அனகனக ஒக்க ராஜு'. கல்யாண் சங்கர் இயக்கிய இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. நகைச்சுவை காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 11ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"கோஹ்ரா சீசன் 2 "

கோஹ்ரா சீசன் 2 என்பது சுதிப் சர்மா, குஞ்சித் சோப்ரா, டிகி சிசோடியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ரன்தீப் ஜா இயக்கிய தொடராகும். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் கடந்த 11ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

"தலைவர் தம்பி தலைமையில்"

நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான அரசியல் நையாண்டித் திரைப்படம் "தலைவர் தம்பி தலைமையில்". இதில் தம்பி ராமையா, பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் (நேற்று) 12ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"பேபி கேர்ள்"

நிவின் பாலி நடிப்பில் அருண் வர்மா இயக்கத்தில், கடந்த ஜனவரி மாதம் வெளியான மலையாளத் திரைப்படம் "பேபி கேர்ள்". இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, சங்கீத் பிரதாப் நடித்துள்ளனர். இப்படம் நேற்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ்"

பிரிடேட்டர் தொடரின் ஏழாவது பாகமான பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ், எல்லே பான்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோஅமடாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் டிராக்டன்பெர்க் இயக்கிய இந்தப் படம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ் ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது.

"தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்"

மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் திகில் பாணியில் எடுக்கப்பட்டு கடந்தாண்டு வெளியான திரைப்படம் தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ். இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமாகும். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (13ந் தேதி) வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com