இந்த வார ஓடிடி வெளியீடு.. 'லக்கி' முதல் 'கென்னடி' வரை

இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.
இந்த வார ஓடிடி வெளியீடு.. 'லக்கி' முதல் 'கென்னடி' வரை
Published on

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

"லக்கி"

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் உருவாகி இருக்கும் திரைப்படம் `லக்கி தி சூப்பர் ஸ்டார்'. இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்லப்பிராணியான நாய்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகி உள்ளது.

"ஹாட் ஸ்பாட் 2 மச்"

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் "ஹாட் ஸ்பாட் 2 மச்". இந்த படத்தில் ஆதித்யா பாஸ்கர், எம்எஸ் பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின், ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், அமேசான் பிரைம், ஆஹா தமிழ், சிம்பிளி சவுத்,ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸாகி உள்ளது.

"அமோஸ் அலெக்சாண்டர்"

மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'அமோஸ் அலெக்சாண்டர்'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஜாபர் இடுக்கி, அஜு வர்கீஸ், தாரா அமலா ஜோசப் மற்றும் கலாபவன் ஷாஜோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

"ஒண்டிமுனியும் நல்லபாடனும்"

கொங்கு வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மையப்படுத்தி "ஒண்டிமுனியும் நல்லபாடனும்" படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சுகவனம். ஆர் இயக்கியுள்ளார். இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் பரோட்டா முருகேசன் நடித்துள்ளார். மேலும், கார்த்திகேசன், சித்ரா நாகராஜன், விஜயன் தியா, வித்யா சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் சன் நெக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

"3 ரோஸஸ் சீசன் 2"

ஈஷா ரெப்பா, குஷிதா கல்லாபு மற்றும் ராஷி சிங் ஆகியோரின் தனித்துவமான நடிப்பில் உருவாகியுள்ள தொடர் "3 ரோஸஸ் சீசன் 2". இந்த தொடருக்கான கதை மற்றும் திரைக்கதையை ரவி நம்பூரி மற்றும் சந்தீப் பொல்லா எழுதியுள்ளனர், கிரண் கே கரவல்லா இந்த தொடரை இயக்கி இருக்கிறார். இந்த தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

"சத்தா பச்சா"

மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி டிராமா கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'சத்தா பச்சா'. குத்து சண்டை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.

"ஸ்ரீ சிதம்பரம் கரு"

தெலுங்கில் வினய் ரத்னம் இயக்கத்தில் காமெடி டிராமாவாக வெளியான படம் 'ஸ்ரீ சிதம்பரம் கரு'. இந்த படத்தில் ந்தியா வசிஷ்டா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் துளசி, கல்பலதா, கோபிநாத், சிவகுமார் மட்டா, அருண் குமார் மற்றும் ஷங்கர் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஈடிவி வின் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.

"கென்னடி"

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் "கென்னடி". கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com