'கில்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்

கரண் ஜோஹரின் 'கில்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'கில்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர். இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான 'கில்' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரில்லர் படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கீனு ரீவ்ஸ் நடித்த 'ஜான் விக்' தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கில்' திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளது.

இந்தநிலையில், பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கணிசமான தொகைக்கு 'கில்' படத்திற்கான ஓடிடி உரிமையைப் பெற்றது. இதற்கிடையில், கில் படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 6-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com