'வாழ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்

மலையாள படமான 'வாழ' படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்துள்ளார்.
'வாழ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

சினிமா திரையுலகில் ஒரு படம் வெற்றியடைந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக அடுத்த பாகங்களை எடுப்பது இயல்பாக உள்ளது. ஆனால், ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ஒரு ஆச்சரியமான நிகழ்வு.

தற்போது, இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' படம் சமீபத்தில் வெளியானது. இதேபோல, மலையாளத்திலும் 'வாழ' என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மலையாள படமான 'வாழ' படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். சவின் இயக்கி இருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்துள்ளார்.

தற்போது 'வாழ' படத்தின் முதல் பாகம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com