வாழை படம் : ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
வாழை படம் : ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அதாவது வாழை தார் ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், முன்னணி திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், 'வாழை' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com