'வடம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?

மஞ்சுவிரட்டை மையமாக கொண்டு உருவான இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
'வடம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் கடந்த 6ந் தேதி வெளியான படம் "வடம்". இந்த படத்தை இயக்குனர் கேத்திரன் இயக்கியுள்ளார். ராஜசேகரன் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், 'ஆடுகளம்' நரேன், ஷரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மஞ்சுவிரட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 3ந் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ஓடிடியில் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com