“பூக்கி” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான் நடித்த “பூக்கி” படம் வரும் 13ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
“பூக்கி” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் தனுஷா நடித்துள்ளனர்.மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை நகைச்சுவையுடன் ‘பூக்கி’ திரைப்படம், எடுக்கப்பட்டுள்ளது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘பூக்கி’ திரைப்படத்தை வரும் மார்ச் 13ம் தேதி ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com