

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இப்படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜய்-அதுல் இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில், மூன்றாவது முறையாக இந்த ஜோடி ‘ரணபாலி’ படத்தில் இணைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரையிலான பெரும் சென்னைப் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் வீரனின் கதையையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வீரராகவும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ, ஆங்கிலேய அதிகாரி சர் தியோடர் ஹெக்டராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘ரணபாலி’ படம், ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபாலி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.