ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “காந்தி டாக்ஸ்”

விஜய் சேதுபதி நடித்துள்ள “காந்தி டாக்ஸ்” படம் வருகிற 6-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “காந்தி டாக்ஸ்”
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாமல் சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது. வசனங்களே இல்லாத படமாக இருந்தாலும் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களை வெகுமாக கவர்ந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள “காந்தி டாக்ஸ்” படம் வருகிற 6-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com