விசித்திர சத்தங்கள்...எலும்புக்கூடு குவியல்...ஓடிடியில் ஒரு திகிலூட்டும் ஹாரர் திரில்லர்

சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் திரில்லர் படங்களை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.
சென்னை,
திரையரங்குகளில் சரியாக ஓடாத படங்கள் கூட ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. குறிப்பாக குற்றம், திகில், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படங்கள் இதில் இடம் பெறுகின்றன. இப்போது நாம் பேசப்போகும் படமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
திரையரங்குகளில் மிதமாக ஓடிய இந்த திகில் திரில்லர், இப்போது ஓடிடியில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
இந்தப் படத்தின் கதை ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு கட்டிடத்தைச் சுற்றி வருகிறது. அதில், சுஷாந்த் என்பவர் இரவு நேரப் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிகிறார். ஒரு இரவு, கட்டிடத்தில் விசித்திரமான சத்தங்கள் கேட்கின்றன. யாரோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர்கிறார்.
இதனால், அவர் சாம் என்ற மருத்துவரைத் தொடர்பு கொள்கிறார். இருவரும் சேர்ந்து, இந்த ரகசியங்களைக் கண்டுபிடிக்க கட்டிடத்திற்குள் செல்கிறார்கள். கட்டிடத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை பார்க்கிறார்கள். அப்போது ஒரு தீய சக்தி சாமை ஆட்கொள்கிறது.
ஆன்மா சாமை விட்டுப் போய்விடுமா? ஆன்மாவின் கடந்த காலம் என்ன? அந்த எழும்பு கூடுகள் யாருடையது? இறுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிய, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
இந்த ஹாரர் திரில்லர் படத்தின் பெயர் 'கார்டு: ரிவெஞ்ச் பார் லவ்'. நிஜாமாபாத்தைச் சேர்ந்த விராஜ் ரெட்டி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், மிமி லியோனார்ட், ஷில்பா பாலகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் திரில்லர் படங்களை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.






