இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட் இதோ!

இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட் இதோ!
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

முத்து என்கிற காட்டான்

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள "முத்து என்கிற காட்டான்" இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இத்தொடரில் மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் 10 எபிசோட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

சப்தம்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் உருவான படம் 'சப்தம்'. இந்த படத்தில் ஆதி, 'ரூபன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் திகில் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மாய பிம்பம்

கே.ஜே.சுரேந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாயபிம்பம். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கியுள்ள இந்தப் படம் 2005 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் கமர்ஷியல் பேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

போர்த் ப்ளோர்

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரிப்பில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவான திரைப்படம் போர்த் ப்ளோர். இதில் தீப்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

அனகோண்டா

சோனி நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 'அனகோண்டா'. தி அன்பெயரபிள் வெயிட் ஆப் மாஸிவ் டேலண்ட் படத்திற்கு பெயர் பெற்ற டாம் கோர்மிகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில், அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

டேர்டெவில்: பார்ன் அகெய்ன் - சீசன் 2

மார்வெல் தயாரிப்பில் 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்' தொடர் உருவாகியுள்ளது. இதில் சார்லி காக்ஸ் மற்றும் வின்சென்ட் டி ஓனோப்ரியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அதிரடித் தொடரின் 2வது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஓ ரோமியோ

பிரபல இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் உருவான படம் 'ஓ ரோமியோ' . இந்த ஆக்சன்-திரில்லர் திரைப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ளனர். இதில் கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார். மேலும், நானா படேகர். பரிதா ஜலால், அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ ரென்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மர்தானி 3

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான அதிரடித் திரைப்படம் "மர்தானி 3". இதில் ராணி முகர்ஜி சூப்பர் காப் ஷிவானி சிவாஜி ராயாக மீண்டும் நடித்துள்ளார். மேலும் மல்லிகா பிரசாத், ஜானகி போடிவாலா, பிரஜேஷ் காஷ்யப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

வலது வாசத்தே கள்ளன்

'வலது வஷத்தே கல்லன்' எனும் மலையாளக் குற்றத் திகில் திரைப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கியுள்ளார். இதில் ,பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ், கே.ஆர். கோகுல், லேனா, லியோனா லிஷாய் மற்றும் ஷாஜு ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ், சிம்பிலி சவுத், பிரைம் வீடியோ ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

மஸ்திஷ்கா மரணம்

மஸ்திஷ்கா மரணம் என்பது மலையாளத்தில் வெளியான திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தை கிரிஷாந்த் இயக்கியுள்ளார். இதில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நிரஞ்ச் மணியன்பிள்ளை ராஜு, திவ்ய பிரபா, ஜெகதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com