

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான படம் 'பத்தா' . கடந்த அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் வருகிற 29ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது‘
அட்லீ (ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்) மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில் மாஸ்டர் சாய் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், பேபி சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தமன் இசையில் ஆக்ஷன் படமாக உருவான 'சிக்மா' படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 30ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடித்த 'இம்மோர்டல்' படம் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியானது. இதில் டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.
ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருந்தது. இந்த படம் வருகிற 30ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பாலாஜி இயக்கிய படம், 'தி டார்க் ஹெவன்'. சின்னத்திரையில் பிரபலமான சித்து கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன், பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சரண், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 30ந் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் "லவ் ஆல்வேஸ்". இதில் கௌரி ஜி. கிஷன், வி. ஜெயப்பிரகாஷ், ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்‘ இந்த தொடர் கொரிய மொழியில் வெளியான 'ஹியர் வி கோ அகைன்' என்ற தொடரைத் தழுவி இது உருவாக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தம்பதியினருக்கும் இளைய தம்பதியினருக்கும் இடையே நிகழும் விசித்திரமான உடல் மாற்றம் (Body swap) மற்றும் காதல், குடும்ப நகைச்சுவை கதையாக இது அமைந்துள்ளது.
மொத்தம் 8 எபிசோடுகள் (ஒவ்வொன்றும் சுமார் 30 நிமிடங்கள் கொண்டது). இந்த வெப் தொடர் வருகிற 30ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது‘
இயக்குனர் ஷஷாங் எலெட்டி இயக்கியுள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர் மற்றும் சௌரப் சச்தேவா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ். ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா மற்றும் அர்லா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். பேண்டஸி-காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள 'அக்கா' வெப் தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த தொடர், அதிகாரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் வருகிற 30ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை கர்ரி பார்க்கர் இயக்கியுள்ளார். மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட கர்ரி பார்க்கர், இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளார். காதல் ஆசை விபரீதமாக மாறுவதையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திகில் திரைப்படமான ‘ஆப்செஷன்’ படத்தின் ஒரிஜினல் அன்கட் வெர்ஷன், வரும் அக்டோபர் 30-ந் தேதி இந்தியாவில் ஓடிடியில் வெளியாகிறது.