"தலைவன் தலைவி" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"தலைவன் தலைவி" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
Published on

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த 25ந் தேதி வெளியான படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தலைவன் தலைவி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் வெளியாகி 6 வாரங்கள் கழித்து ஓடிடி.யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com