‘டாக்ஸிக்’ ஓ.டி.டி. வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
‘டாக்ஸிக்’ ஓ.டி.டி. வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
Published on: 

அக்டோபர் மாதத்துக்கான வெளியீட்டு பட்டியலிலும் ‘டாக்ஸிக்’ இடம்பெறவில்லை. இதனால், யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ‘டாக்ஸிக்’. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

நட்சத்திர பட்டாளம்

கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவான இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் போதைப்பொருள் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கும் ராயா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் யாஷ் நடித்துள்ளார். அவரது சகோதரி கங்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன.

கலவையான விமர்சனங்கள்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்ட பொருட்செலவில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், உலகளவில் சுமார் ரூ.350 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை இப்படம் பெறவில்லை.

ஓ.டி.டி. வெளியீட்டில் தாமதம்

இதற்கிடையே, ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை செப்டம்பர் மாதத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், செப்டம்பர் மாதம் முடிந்தும் படம் வெளியாகவில்லை.

மேலும், அக்டோபர் மாதத்துக்கான வெளியீட்டு பட்டியலிலும் ‘டாக்ஸிக்’ இடம்பெறவில்லை. இதனால், யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. படத்தின் புதிய ஓ.டி.டி. வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com