ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகி பாபுவின் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'


ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகி பாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்
x
தினத்தந்தி 4 March 2025 11:31 AM IST (Updated: 4 March 2025 1:18 PM IST)
t-max-icont-min-icon

யோகி பாபு மற்றும் செந்தில் நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது.

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'. இந்த படத்தில் யோகி பாபுவுடன் செந்தில், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கியுள்ளார். 'சாதக பறவைகள்' சங்கர் இசை அமைத்துள்ள இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' திரைப்படம் வருகிற 7-ந் தேதி ஆஹா தமிழ் மற்றும் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.


Next Story