ஜூனியர் என்.டி.ஆரின் வெயிட் லாஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரசாந்த் நீல்

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ‘டிராகன்’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக வெறும் 4 மாதங்களில் 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரின் வெயிட் லாஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரசாந்த் நீல்
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.

பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. அதிலும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ‘டிராகன்’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக வெறும் 4 மாதங்களில் 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கதாபாத்திரத்திற்காக எடையை குறைக்க சாதாரணமாகத்தான் கூறினேன். ஆனால் ஜூனியர் என்.டி.ஆர் வெறித்தனமாக உழைத்து தனது உடல் எடையை குறைத்தார்” என்றார்.

மேலும், “அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டதால், பயந்துபோன அவரது அம்மாவும்,மனைவியும் என் மீது கடும் கோபம் கொண்டனர்” என்றும் பிரசாந்த் நீல் சிரிப்புடன் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com