புதுமுகங்கள் நடிக்கும் அமானுஷ்ய படம்

புதுமுகங்கள் நடிக்கும் அமானுஷ்ய படம்
Published on

திகிலும் மர்மமும் நிறைந்த கதையம்சத்தில் ``நேற்று நான்.. இன்று நீ'' என்ற படம் தயாராகிறது. இந்தப் படத்தை பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை, எழுதி டைரக்டு செய்துள்ளார். இவர் திரைப்பட கல்லூரியில் பயின்று ஏற் கனவே சில படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``சுவாரசியமான கதை களத்தில் திகில் படமாக உருவாகிறது. வளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பி பூர்வீக சொத்தை அடைய வந்த நாயகி எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களையும், தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகிறது'' என்றார்.

இதில் புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா ஆகியோருடன் ஆர்.அரவிந்தராஜ், பிஜாய் மேனன், எச். பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். எச்.பாட்சா தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: இ.ஆம்ஸ்ட்ராங், இசை: ஜெகன் கல்யாண்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com