‘கருப்பு’ படத்தின் டைட்டில் கார்டை வெளியிட்ட ஆர்.ஜே பாலாஜி

பல தடைகளை கடந்து வெளியான இந்த படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘கருப்பு’ படத்தின் டைட்டில் கார்டை வெளியிட்ட ஆர்.ஜே பாலாஜி
Published on

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருப்பு’ தற்போது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரிஷா,சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், பல தடைகளை கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி கருப்பு படத்தின் டைட்டில் கார்டை வெளியிட்டுள்ளார்.அதில் , கருப்பு குழுவின் சார்பாக, அன்பான ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!!! என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com