கவர்ச்சிக்கு மாறிய அனு இம்மானுவேல்

நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Published on

பட வாய்ப்பை பிடிப்பதற்காக இப்படி செய்வதாக விமர்சனங்கள் எழுவது உண்டு. இந்தி நடிகைகள்தான் கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்வதில் தீவிரமாக உள்ளனர். தற்போது குடும்ப பாங்காக நடித்த தென்னிந்திய நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க கவர்ச்சிக்கு மாறுகின்றனர். இந்த பட்டியலில் புதிதாக நடிகை அனு இம்மானுவேல் சேர்ந்து இருக்கிறார்.

இவர் தமிழில் விஷாலின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் குடும்ப பாங்கான வேடங்களில் வந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குடும்ப பாங்கான தோற்றத்தில் இருப்பது போன்ற படங்களையே வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் அரை குறை ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கருத்து பதிவிடுகிறார்கள். பட வாய்ப்பு பிடிக்க கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக விமர்சனங்களும் வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com