தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல். இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் பஹலஜ் நிஹலானி தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்ததாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஐ லவ் யூ பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி என்னை புகைப்படம் எடுத்தார். ஆனால் அது ஆபாச படம் என்று பிறகு தெரிந்தது. அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்று நடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த படத்தில் நடிக்க விரும்பாமல் விலகி விட்டேன் என்றார்.