ரசிகர்களுடன் 'கருப்பு' படத்தின் முதல் காட்சியை பார்த்த படக்குழு

கருப்பு படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
ரசிகர்களுடன் 'கருப்பு' படத்தின் முதல் காட்சியை பார்த்த படக்குழு
Published on

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம், மே 14-ந்தேதி (நேற்று) வெளியாகி இருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படம் எதிர்பார்த்தபடி நேற்று வெளியாகவில்லை. சூர்யாவின் படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என்று கருப்பு சட்டை அணிந்து நேற்று காலை முதலே ஆர்வமாக தியேட்டரை நோக்கி படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் 'கருப்பு' படம் ரிலீசாகாத விரக்தியில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதற்கிடையில், படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னை ரோகினி தியேட்டரில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து நடிகை திரிஷா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பார்த்து ரசித்தனர். அப்போது சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் உடனிருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com