தவெக தலைவர் விஜய்க்கு 'தி கோட்' பட இயக்குனர் வாழ்த்து

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தவெக முன்னிலை பெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு 'தி கோட்' பட இயக்குனர் வாழ்த்து
Published on

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தவெக முன்னிலை பெற்று வருகிறது.

தனிப்பெரும் கட்சியாக விஜயின் தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில், விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், விஜய்க்கு இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யின் கோட் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு ஆவார். தனது எக்ஸ் தளத்தில் விஜய்யை பாராட்டி வெளியிட்ட பதிவுகளை வெங்கட் பிரபு பகிர்ந்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com