ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை

ஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.
Published on

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி சினிமா வட்டாரத்தை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பலருடன் மோதி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷை கண்டித்தார். என்னை பார்த்து கீர்த்தி சுரேஷ் கேவலமாக சிரித்து இருக்கிறார். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை புரிந்து கொள்வீர்கள். உங்கள் சிரிப்பை மறக்க மாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

இப்போது தெலுங்கு நடிகை ஹேமாவுடன் மோதி இருக்கிறார். ஸ்ரீரெட்டியை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர்-நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் என்றார்.

இதனால் கோபமான ஸ்ரீரெட்டி ஹேமாவை கண்டித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். அமெரிக்க விஷயத்தில் நீங்கள் கருத்து சொன்னால் எனது அதிரடியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com