விஷாலின் 'மகுடம்' பட டிரெய்லர் எப்போது? - வெளியானது அறிவிப்பு

இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
மகுடம்
Published on

சென்னை,

மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மகுடம்’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துஷாரா விஜயன் - அஞ்சலி

‘மகுடம்’ படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் ரிலீஸ் தேதி

இப்படம் வருகிற 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 7-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com