"இஸ்லாம் மதத்தை தேர்வு செய்தது ஏன்?"- நடிகர் ஜெய் விளக்கம்

நடிகர் ஜெய் பேட்டி ஒன்றில் ஹிந்துவாக இருந்து அதன் பின் இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து பேசியுள்ளார்.
"இஸ்லாம் மதத்தை தேர்வு செய்தது ஏன்?"- நடிகர் ஜெய் விளக்கம்
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஜெய். இவர் 2002ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து,சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் சட்டென்று மாறுது வானிலை என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ஜெய் பேட்டி ஒன்றில் ஹிந்துவாக இருந்து அதன் பின் இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன்..ஜீசஸ்க்கு மாலை போட்டு ஒரு வருடம் விரதம் இருந்திருக்கிறேன். கோயில்களில் என்னை நடத்திய விதம் வேறாக இருந்தது. மசூதிக்கு சென்ற போது அங்கே என்னிடம் ஒருவர் கூட பேசவில்லை. நான் நடிகன் என்று அனைவருக்கும் தெரிந்த போதிலும் வெளியே வந்து தான் பேசினார்கள். அப்போது தான் இங்கே அனைவரையும் சமமாக பார்க்கிறார்கள் என எனக்கு தோன்றியது. கடவுளை மட்டுமே முக்கியமாக நினைக்கிறார்கள் என்றும் தெரிந்தது.எனக்கு அப்போது இங்கே ஒரு சமத்துவம் இருப்பதாக தோன்றியது.

எவ்வளவு பெரிய பிரபலமான நபர் வந்தாலும் அவரைப் பெரியதாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. நாம் நினைத்ததை வேண்ட, கேட்க நமக்கு ஒரு இடமும் நேரமும் கொடுக்கிறார்கள். யாருக்காகவும் நம்மைக் கிளம்பச் சொல்லாமல், நமக்கான அவகாசத்தை அவர்கள் கொடுத்தார்கள். இவை எல்லாம் இங்கு இருப்பது எனக்கு நன்றாக இருந்தது. இவை எல்லாவற்றையும் நானே பார்த்து உணர்ந்தேன்.

இதில் இன்னொரு விஷயம் என்ன என்றால் நான் மட்டுமதான் மாறி இருக்கிறேன், வீட்டில் அப்படியேதான் இருக்கிறார்கள். இன்னுமும் அவர்கள் கோயிலுக்குப் போய் வந்தால் விபூதி வைப்பார்கள், அதை அன்பாக வாங்கிக் கொள்வேன" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com