ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு

ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு
ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு
Published on

கோவை

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடத் தில் உள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு அளித்து உள்ள தளர்வுகளிலும் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி கோவை மாநகராட்சியில் ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி உள்பட 8 சாலைகள், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை, அவினாசி சாலையில் உள்ள சில பகுதிகள்,

காந்திபுரம் 1 முதல் 11 - வது வீதி வரையிலான பகுதிகளில் பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் நேற்று 2-வது வாரமாக அடைக்கப்பட்டிருந்தது.

அத போல் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மது கடை கள் மூடப்பட்டிருந்தன. நகரில் உள்ள நகை கடைகள், துணிக்கடைகள் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓட்டல்கள், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கின. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com