பதாகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

புதுவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பதாகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
Published on

புதுச்சேரி

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (பேனர்கள்), கொடிக்கம்பங்கள், சாரம் கட்டிய கம்புகள், சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. மேலும் வாகன போக்குவரத்திற்கும், பொதுமக்களும் இடையூறாக உள்ளது. எனவே ராஜீவ்காந்தி சிலை, இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை, மரப்பாலம் சந்திப்பு, அண்ணா சிலை, வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை, தியாகி சுப்பையா சிலை, அஜந்தா சிக்னல் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு போன்ற முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள பேனர்கள் மற்றும் சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். ரவுண்டானா, சிக்னல்களில் பேனர்கள் வைத்தால் போக்குவரத்து போலீசால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com