வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி

காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி
Published on

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கை கிராமத்தில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேத்தூர், அத்திப்படுகை மற்றும் தென்னங்குடி கிராமங்களில் மூன்று நாட்கள் நேரடி களப் பயிற்சி மேற்கொண்டனர்.

கல்லூரியின் இணை பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் சேத்தூர் கிராமத்தில் நடந்த பயிற்சியில், வாகை மர செக்கு எண்ணெய் தயாரிக்கும் விவசாயி ஆறுமுகம், நெல் விவசாயி லெனின் மற்றும் பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கண்ணபிரான் ஆகியோர் தங்கள் அனுபவங்களை தெரிவித்தனர். இந்த பயிற்சியில் கடைமடை விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ், விவசாயிகள் குருமூர்த்தி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com