

ஓசூர்,
ஓசூர் தாலுகா பெலத்தூர் அருகே உள்ள லிங்காபுரத்தை சேர்ந்த 20 வயது மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 31-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் பாகலூர் போலீசில் புகார் செய்தனர். அதில், ஓசூர் தாலுகா அலசப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 24) எங்களது மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.