கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கடலூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடலூர்,

கடலூர் சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலாஜி என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் முடிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு வருகிற சித்திரை மாதம் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு சாவடியில் நடந்த சாலை விபத்தில் பாலாஜி உயிரிழந்து விட்டார்.

தற்கொலை

இதனால் பிரியா மனவேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் இறந்து போன பாலாஜிக்கு நேற்று கருமகாரியம் நடந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரியா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது தந்தை தேவநாதன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com