தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்.
தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்
Published on

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே தெசவிளக்கு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் 17 வயது மகள் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதில், தங்களது மகளை திருமண ஆசைவார்த்தை கூறி, அதே பகுதியைசேர்ந்த வெங்கடாசலம் என்பவரது மகன் இளங்கோவன் (வயது 19) கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com