பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை.
பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகள் சந்தியா (வயது 19). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வந்தார். சந்தியா தினந்தோறும் செல்போனை பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்யவில்லை என அவரது தாய் அம்சவல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி சந்தியா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com