கல்லூரி மாணவர் தற்கொலை

புதுச்சேரியில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

புதுச்சேரி

புதுவை தேங்காய்திட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் மகன் ராமகிருஷ்ண சாய் (வயது 19). கல்லூரி மாணவன். இவர் இன்று காலை திடீரென வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமகிருஷ்ண சாய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ராமகிருஷ்ண சாய் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவர் கடந்த சில முன் தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட ராமகிருஷ்ண சாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com