கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததால் கல்லூரி மாணவி தற் கொலைக்கு முயன்றார்.
கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
Published on

வில்லியனூர்

காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததால் கல்லூரி மாணவி தற் கொலைக்கு முயன்றார்.

கல்லூரி மாணவி

வில்லியனூர் அருகே ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 34). இவர் திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

இது தொடர்பாக மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜவேலுவை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கொலை மிரட்டல்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த ராஜவேலு, கல்லூரிக்கு சென்ற அந்த மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறையில் அடைப்பு

இதுதொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜவேலுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காலாப்பட்டு சிறையில் மீண்டும் அடைத்தனர்.

காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com