

தாமரைக்குளம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 14-ந்தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், அனைவருக்கும் வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், விவசாயிகனை பிரதமர் உடனடியாக சந்தித்து பேச வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.