வில்லன் ஆகிறார் சிரிப்பு மாறாத மதன்பாப்

தெலுங்கு படத்தில் வில்லனாக நடிப்பதாக மதன்பாப் கூறியுள்ளார்.
வில்லன் ஆகிறார் சிரிப்பு மாறாத மதன்பாப்
Published on

நகைச்சுவை நடிகர் மதன்பாப்பிடம், "கொஞ்ச நாட்களாக உங்களை படங்களில் பார்க்க முடியவில்லையே?" என்று நிறைய பேர் விசாரிக்கிறார்களாம்...

அதற்கு அவர், "வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நண்பர்களுடன் கனடா போய் விட்டேன். அங்கேயே 3 வருடங்கள் தங்கி விட்டேன். எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டி விட்டு, சென்னை திரும்பி விட்டேன். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

ஏ.ஆர்.முருகதாசின் அசோசியேட் டைரக்டர் பொன் குமார் இயக்கத்தில் 1947 என்ற படத்தில் நடிக்கிறேன். கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி பாபுவுடன், 'கான்டிரக்டர் நேசமணி" என்ற படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறேன். சந்தானம், சரத்குமார், ஜீ.வி.பிரகாஷ், பிரபுதேவா, வடிவேல், டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகனாக நடிக்கும் படம் என கைவசம் நிறைய படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ஒரு கன்னட படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்" என்றார் அக்மார்க் சிரிப்பு மாறாமல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com