புதுச்சேரி-சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்

புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி-சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்
Published on

சென்னை,

புதுச்சேரியில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதிய துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு சிறிய ரக சரக்கு கப்பலானது வெள்ளோட்டமாக புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலை புதிய துறைமுகத்தில் நிறுத்தி வைத்து கண்டெய்னர்களை கையாள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சரக்கு கப்பல் புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்டது. இந்த சரக்கு கப்பல் வரும் 28-ந்தேதி சரக்குகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி திரும்ப உள்ளது. புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி இடையே கடல்வழி போக்குவரத்துக்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com