கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தினா.
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

அரிசி, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காமராஜர் சிலை அருகே சூசி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் புருஷோத்தமன், மக்கள் உரிமை சமூக செயற்பாட்டாளர் முத்துக்கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அனவரதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கரன், ஏழுமலை, சிவக்குமார், ஹரிஷ், இளைஞர் சங்க தலைவர் சுதாகர், ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com