இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

அரியாங்குப்பத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
Published on

அரியாங்குப்பம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு மாநாடு நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாடு கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தொகுதி துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொகுதி செயலாளர் சுகதேவ் மாநாட்டு அறிக்கையை வாசித்தார். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com