பாலியல் தொல்லை புகார்: ஸ்லம்டாக் மில்லினர் நடிகர் மீது வழக்கு

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமானவர் மதுர் மிட்டல்.
பாலியல் தொல்லை புகார்: ஸ்லம்டாக் மில்லினர் நடிகர் மீது வழக்கு
Published on

ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். இளம் பெண்ணுடன் மதுர் மிட்டல் நெருக்கமாக பழகி உள்ளார். அந்த பெண் தற்போது பாலியல் ரீதியாக மதுர் மிட்டல் தன்னை துன்புறுத்தியதாகவும் மோசமான வார்த்தைகளை பேசி அடித்ததாகவும் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மதுர் மிட்டல் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு மதுர் மிட்டலை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கழுத்தில் 15 தடவை அடித்து தலைமுடியை பிடித்து இழுத்து வலது கண்ணில் குத்தி கீழே தள்ளி உள்ளார் என்று பெண்ணின் வக்கீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com